Thursday, March 29, 2007

27 சதவீத இடஒதுக்கீட்டு : சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து, "IIMS' டாக்டர்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கனவே இட ஒதுக்கீடு தொடர்பாக விசாரணை நடந்து வரும் நலையில், 2007&08 கல்வி ஆண்டு முதல் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அர்பூத் பசாயத், எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில், "இட ஒதுக்கீடு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம் அடுத்த 2008&09 கல்வி ஆண்டு வரையாவது இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இந்நலையில் , இன்று மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நன்றி: தினமலர்

பி.கு: அடுத்த விசாரணை வரும் ஆகஸ்ட் மாதம் என்று தெரிய வந்துள்ளது.

நீதிமன்றம் கூறியவை:

1. 1931 census-ஐ வைத்து, இடஒதுக்கீடு தர வேண்டி, OBC என்ற பிரிவை வகைப்படுத்துவது சரியாகாது.

2. தாழ்த்தப்பட்டவரின் (SC/ST) இடஒதுக்கீடு இடைக்காலத் தடையால் பாதிக்கப்பட மாட்டாது.

3. Reservation cannot be permanent and appear to perpetuate backwardness

4. The state was empowered to enact an affirmative Act to help the backward classes but this action could not be unduly adverse to those who were left out.

5. எந்தெந்த பிரிவினர் சமூக மற்றும் பொருளாதார அளவிலே பின் தங்கியவர்கள் என்று வரையறுப்பதற்குத் தேவையான / அவசியமான data-வை சேகரிப்பதற்கு முன்னதாகவே, இந்த இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த அரசு எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்வி எழுப்பியது.

Also see: சற்றுமுன்: 27 இடஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை

*** 317 ***

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

Hariharan # 03985177737685368452 said...

இந்த நீதியைத் தீர்ப்பாகச் சொல்லி இடைக்காலத்தடை விதித்த நீதிபதியின் குலம் என்ன? கோத்ரம் என்ன? எனும் ஆராய்ச்சி இனி நடக்கும் வலைஉலகில்!

தனித்தமிழ்நாடு கோரிக்கை மீண்டும் எழுப்ப மேட்டர் கிடைச்சாச்சு!

ஆட்சி அதிகாரத்தில் ஈழத்தமிழர்க்கு எல்லாம் செஞ்சுதந்த தீரர்கள், சூரர்கள் தமிழ்நாட்டு ஏழைத் தமிழர்க்கெல்லாம் எல்லாமும் கிடைக்கச்செய்யக் குரல் எழுப்புவார்கள் இனிமேல்!

enRenRum-anbudan.BALA said...

Hariharan,

கருத்துக்கு நன்றி.

நீதிமன்றம் கேட்பதின் சாராம்சம் புரியாமல், நீதிபதிகளை சாடுவதிலும், 2000 வருடத்துக் கதைகளைப் பேசுவதிலும் உருப்படியாக எதுவும் ஆகப் போவதில்லை என்று அனைவரும் உணர்தல் நல்லது.

சில கேள்விகளை / விளக்கங்களை நீதிமன்றம் அரசிடம் கேட்டுள்ளது. அதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்து, சரியான முறையில், இடஒதுக்கீடை அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவே நினைக்கிறேன்.

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails